\
மீண்டும் சமூக வலைதளங்களில் சிம்பு: எப்போது வருகிறார் தெரியுமா?

மீண்டும் சமூக வலைதளங்களில் சிம்பு: எப்போது வருகிறார் தெரியுமா?

மீண்டும் சமூக வலைதளங்களில் சிம்பு: எப்போது வருகிறார் தெரியுமா?
Published on

மீண்டும் சமூக வலைதளங்களில் சிம்பு: எப்போது வருகிறார் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த், விஜய், நயன்தாரா என தமிழின் முன்னணி நடிகர் நடிகைகள் எல்லோரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு ஃபாலோயர்ஸ்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். நடிகர் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் இருந்து விலகினார். அதனால், அறிக்கைகள் மட்டுமே சினிமா பி.ஆர்.ஓக்கள் மூலம் தந்துகொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்திருந்தார். அதற்பிறகு 90 எம்.எல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வருபவர், அடுத்த மாதம் முதல் ’மாநாடு’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில், சிம்பு மீண்டும் சோசியல் மீடியாவுக்கு வரவுள்ளார் . நாளை மறுநாள் அக்டோபர் 22 ஆம் தேதி காலை 9.09 மணிக்கு ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் ஆகிய தளங்களில் வரவிருப்பதோடு தனது புதிய யூடியூப் சேனலையும் துவங்கவுள்ளார். இதனால், சிம்பு ரசிகர்கள் மட்டுமல்ல சமூகவலைதளவாசிகளும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். இனி சோசியல் மீடியா களைக்கட்டப்போகிறது என்பதே சமூக வலைத்தளவாசிகளின் நம்பிக்கை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com