\
தனி விமானத்தில் வருகிறது ஸ்ரீதேவியின் உடல்!

தனி விமானத்தில் வருகிறது ஸ்ரீதேவியின் உடல்!

தனி விமானத்தில் வருகிறது ஸ்ரீதேவியின் உடல்!
Published on

துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் இந்‌தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. 

மறைந்த ஸ்ரீதேவியி‌ன் ‌உடலை இந்தியா கொண்டு வர ஒரு தனி விமானம் இன்று பிற்பகல் 1 மணியளவில் மும்பையிலிருந்து
புறப்பட்டு, துபாய் சென்றிருப்பதாக இந்திய விமானநிலைய ஆணை‌யம் தெரிவித்துள்ளது. அந்த விமானம் ஸ்ரீதேவியின் உடலுடன்
இன்றிரவு 8 மணி வாக்கில் மும்பை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி நேற்றிரவு
மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அங்குள்ள சட்ட விதிகளின்படி மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. 

மருத்துவ சோதனைக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் துபாய் தலைமை காவல் அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. ஸ்ரீதேவியின்
உடலை அனுப்பி வைப்பதற்‌குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவரது குடும்பத்தினருக்கு செய்து வருவதாக ஐக்கிய அரபு
‌அமீரகத்திற்‌கான இந்தியத் தூதர் நவ்தீப் சூரி தெரிவித்துள்ளார். இதனிடையே, ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்காக
மும்பையில் உள்ள அவரது‌ இல்லம் முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com