actor soori says on about film piracy issues
நடிகர் சூரிஎக்ஸ் தளம்

”ஒரு திரைப்படம் பலரின் கனவு, உழைப்பு; அப்படியெல்லாம் செய்யாதீங்க” - வேதனையுடன் நடிகர் சூரி அறிக்கை

புதிய திரைப்படங்களை சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிர்வது, உள்ளத்தை சிதைக்கிறது என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.
Published on

இன்றைய டிஜிட்டல் உலகத்தால், திரைப்படங்கள் வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில் சமூக வலைதளங்களில் கசிந்து விடுகின்றன. இதனால் பல கோடி கொடுத்து எடுக்கப்பட்ட படங்களும், போதிய அளவுக்கு வியாபாரம் ஆகாமல் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இதற்கு அரசும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களும் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும், மறுபுறம் தொடர் சங்கிலி போன்று வெவ்வேறு தளங்களின் வாயிலாக புதுப் படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், புதிய திரைப்படங்களை சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிர்வது, உள்ளத்தை சிதைக்கிறது என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.

actor soori says on about film piracy issues
நடிகர் சூரிஎக்ஸ் தளம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ”ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று.

இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன.

சூரி
சூரிpt desk

ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல. கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது.

actor soori says on about film piracy issues
விஜய், உதயநிதி இருவரும் எனக்கு வேண்டியவர்கள் தான் - காதணி விழாவில் நடிகர் சூரி

ஒரு படம் வென்றாலும், தோற்றாலும்… அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும் போது, அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு ‘வியூ’க்காக, யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பைக் கலைத்து விடுகிறோம்.

திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.

நடிகர் சூரி
நடிகர் சூரிfb

இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல்.

எனவே என் பணிவான வேண்டுகோள்:

திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்.

உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது.

நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம்” வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com