சினிமா
படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் சூரி பிறந்தநாள் கொண்டாட்டம்
படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் சூரி பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூரி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதில் நடித்து வரும் சூரி, படப்பிடிப்பு தளத்திலேயே தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இன்றுதான் சூரியின் பிறந்த நாள் என்றாலும், ரசிகர்களுடன் இணைந்து ஒருநாள் முன்னதாகவே அவர் கொண்டாடியுள்ளார்.