பொங்கலுக்கு விஜயுடன் களமிறங்கும் SK மற்றும் சூர்யா.. என்ன பிளான்?
அடுத்தாண்டு பொங்கலன்று விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அதே நாளில் 2 முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு வெளியாகவிருப்பதாக கூறப்பட்ட சூர்யாவின் கருப்பு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவதாக தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. முழு நேர அரசியல் களத்துக்கு வர முடிவு செய்துள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், தனது திரையுலகப் பயணத்தை நிறைவு செய்யும் படத்துக்காக இயக்குநர் ஹெ.வினோத்துடன் கரம் கோர்த்துள்ளார். ‘ஜனநாயகன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன.
‘ஜனநாயகன்’ என்ற தலைப்புக்காகவே திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தத் திரைப்படம். இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சூரியாவின் கருப்பு படத்துடைய ரிலீசில் அதிரடி மாற்றம் ஒன்று நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இப்படத்தின் ரிலீஸ் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம்தான் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இதனால் அப்படத்துடன் கருப்பு மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படமும் ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் குறித்து பேசும் படமாக 'பராசக்தி' உருவாகியுள்ளது. இப்படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. அதனால் விஜயின் ஜனநாயக படத்துடன் அதே நாளில் 2 முன்னணி நடிகர்களின் படங்களும் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.