”அஜித் அழைத்தால் கண்டிப்பாக அவரோடு பணியாற்றுவேன்; சினிமா தான் என் உலகம்” - எஸ்.ஜே.சூர்யா

”அஜித் அழைத்தால் அவருடன் பணியாற்ற தயார்; எப்போது நான் பெரிய ஹீரோ ஆகிறேனோ, அப்போது திருமணத்தை பற்றி யோசிக்கலாம்” என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
sj.surya
sj.suryapt desk

எஸ்.ஜே.சூர்யா தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் வரும் 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில்,

yuvan shankar raja
yuvan shankar rajapt desk

”இந்த செய்தியாளர் சந்திப்பே நன்றி கூறுவதற்கு தான். படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. ராதாமோகன் இந்த கதையை சொல்லும் போது ரொம்ப பிடித்திருந்தது. ஒருவருக்கும் பொம்மைக்கும் காதல் என்பது கேட்கவே புதிதாக இருந்தது. வெளிநாட்டில் பொம்மையை கல்யாணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இதை அழகான காதல் கதையாக மாற்றியுள்ளார் ராதாமோகன்.

படத்தில் கதாநாயகி முதலில் ப்ரியா கிடையாது. ஆனால், இவர்தான் ரியல் பொம்மை மாதிரியே இருக்கிறார். குறிப்பாக இயக்குனர் படமாக்கியபோது பிரியா பவானி சங்கரை பார்த்து மிரண்டுபோனார். இதற்காக இயக்குனர் பயிற்சி வகுப்புகள் எல்லாம் நடத்தினார். அதுவும் படத்திற்க்கு உதவியாக இருந்தது. பொதுவாக நான் அடுத்தவர்கள் பணியில் குறுகிடமாட்டேன் இயக்குனர் கேட்டுக் கொண்டதால் 'முதல் முத்தம்' பாடலுக்கு கார்கியுடன் பணியாற்றினேன்.

sj.surya
sj.suryapt desk

இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது, இந்தியில் ரீமேக் செய்ய திட்டம் உள்ளது, இப்படி பல வழிகளில் படத்தை கொண்டு சேர்க்கும் திட்டத்தோடு இருந்தோம். அப்படி இருக்கையில் முழு படத்தையும் எடிட்டர் ஆண்டனி காண்பித்தார். அப்போது ஒரு 12 நிமிடம் கொஞ்சம் குறையாக இருந்தது. அதை நீக்கிவிட்டால் படம் வேகமாக இருக்குமே என எண்ணி அதை நீக்கச் சொன்னேன்.

'காக்க காக்க' படத்தில் இருந்து 'ரோபோ' படம் வரையில் பணியாற்றியவன். நான் சொல்லுகிறேன். இந்த படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்றார் எடிட்டர் ஆண்டனி. அவர் அப்படி சொன்னதும் அதை என்னால் உணர முடிந்தது. பின்னணி இசையை யுவன்சங்கர் ராஜா பிரமாதமாக செய்துள்ளார். பின்னணி இசைக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

bommai movie
bommai moviept desk

இந்த படத்திற்காக கடைசி நான்கு ஐந்து நாட்கள் தூங்கவில்லை. அனைவரையும் மறந்துவிட்டேன். இந்த பொம்மை திரைப்படம் மறக்க முடியாத மைல்கல்லாக இருக்கும். பொம்மை எனக்கு முக்கியமான படம். ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக எனது பயணத்தை தொடங்கினேன். நான் திருப்பி திருப்பி சினிமாவிலேயே காசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் இந்த படத்தில் மொத்த பணத்தையும் போட்டுள்ளேன். உங்கள் கையில் படத்தை கொடுக்கிறேன். நீங்கள் ஆதரித்தால் அடுத்தடுத்து அநேக திட்டங்கள் உள்ளது. பொம்மை மட்டும் க்ளிக் ஆகி விட்டால், இந்த கதை சீனா தாண்டி செல்லும். இந்த படம் ஒரு யுனிவர்சல் கான்செப்ட்.

sj.surya
sj.suryapt desk

ப்ரியாவுக்கு எங்கள் குடும்ப முகம் உள்ளது. இந்த படம் வெற்றியாகி என்னை மிகப்பெரிய ஹீரோ ஆக்கி விட்டால், எனது திருமணத்தை பற்றி யோசிக்கலாம். அஜித் அழைத்தால் நான் செல்லாமல் இருப்பேனா. அவர் அழைத்தால் கண்டிப்பாக அவரோடு பணியாற்றுவேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com