actor sivakumarpt desk
சினிமா
“என் மனைவியின் மடியில் உயிர் பிரிய விரும்புகிறேன்” - நடிகர் சிவக்குமார் உருக்கம்
“என் மனைவியின் மடியில் உயிர்விட விரும்புகிறேன்” என பல்லடத்தில் நடைபெற்ற திருக்குறள் உரை திரையிடல் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் உருக்கமான பேசினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள வனாலயத்தில் நடிகர் சிவகுமாரின் ‘திருக்குறள் உரை திரையிடல் நிகழ்வு’ நடைபெற்றது. வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றை நூறு திருக்குறள்களோடு பொருத்தி அதை காணொளியாக்கி நிகழ்ச்சியில் திரையிட்டனர்.
sivakumarpt desk
நடிகர் சிவகுமார் தனது வாழ்வில் தான் சந்தித்த இயக்குனர்கள், நடிகர்கள், நண்பர்கள் மற்றம் தனது குடும்ப உறவுகள் என 100 பேரின் வாழ்க்கையை திருக்குறளோடு ஒப்பிட்டு இந்த காணொளியை வெளியிட்டார்.
முன்னதாக பேசிய நடிகர் சிவகுமார், “பெண்கள்தான் உலகில் படைப்பு கடவுள். எனது தாய் இறந்து விட்டார். எனக்கு இரண்டாவது தாய் எனது மனைவி தான். என் மனைவியின் மடியில் என் உயிர் பிரிய விரும்புகிறேன்” என உருக்கமாக பேசினார். இந்நிகழ்வில் பல்லடம் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.