\
ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்

ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்

ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்
Published on

இன்று வெளியாகியுள்ள ஹீரோ படத்தினை தனது ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்து ரசித்தார்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படமும், கார்த்திக், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படமும் இன்று வெளியாகியுள்ளன. ஹீரோ படத்தை இரும்புத் திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். அதேபோல், தம்பி படத்தை த்ரிஷியம், பாபநாசம் படங்களை இயக்கிய மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன் ஹீரோ படத்தினை பார்த்தார். அத்துடன், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் உள்ளிட்ட படக்குழுவினர் வருகை தந்தனர். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com