\
சென்னையில் துவங்கும் ’சிவகார்த்திகேயன் 20’ படப்பிடிப்பு

சென்னையில் துவங்கும் ’சிவகார்த்திகேயன் 20’ படப்பிடிப்பு

சென்னையில் துவங்கும் ’சிவகார்த்திகேயன் 20’ படப்பிடிப்பு
Published on

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சிவகார்த்திகேயன் 20’ படத்தின் படப்பிடிப்பு இந்தவாரம் துவங்கவுள்ளது.

’டாக்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தினைத் தொடர்ந்து, தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் 20 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

சமீபத்தின் இதன் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியான நிலையில், படப்பிடிப்பு இந்த வார இறுதியில் சென்னையில் துவங்கவுள்ளது. ஏற்கனவே, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் வெளியாகி வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com