மீண்டும் பள்ளி மாணவராக நடிக்கும் சிவகார்த்திகேயன்?

மீண்டும் பள்ளி மாணவராக நடிக்கும் சிவகார்த்திகேயன்?
மீண்டும் பள்ளி மாணவராக நடிக்கும் சிவகார்த்திகேயன்?

‘டான்’ படத்தில் பள்ளி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ படத்தில் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் பள்ளி மாணவராக நடித்து கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் பள்ளி மாணவராக சில காட்சிகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசைமையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ பட புரொமோஷன்களில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டிகளில் எல்லாம் க்ளீன் ஷேவ் செய்து உடல் நன்கு இளைத்து பள்ளி மாணவர் தோற்றத்தில்தான் வலம் வந்தார்; வந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com