சினிமா
மகனுக்கு ’குகன் தாஸ்’ என்று பெயர் சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்
மகனுக்கு ’குகன் தாஸ்’ என்று பெயர் சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனை பெயருடன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது உறவினரான ஆர்த்தியை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 12-ஆம் தேதி சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
“18 வருடங்களுக்குப் பிறகு என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், மகன் நெற்றியில் அன்பு முத்தமிடும் புகைப்படத்தை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், மகனுக்கு ’குகன் தாஸ்’ என்று பெயரிட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.