\
நடிகர் சூரியின் ஓட்டல்களைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சூரியின் ஓட்டல்களைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சூரியின் ஓட்டல்களைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்!
Published on

நடிகர் சூரி, மதுரையில் தொடங்கியுள்ள சைவம் மற்றும் அசைவ ஓட்டல்களை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை திறந்து வைத்தார். 

நகைச்சுவை நடிகர் சூரி, 2017 ஆம் ஆண்டு ’அம்மன்’ என்ற சைவ உணவகத்தை, மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். இதையடுத்து அவர், ’அம்மன்’  சைவ உணவகம் மற்றும் ’அய்யன்’ அசைவ உணவகங்களை மதுரை அவனியாபுரம், விமான நிலைய பைபாஸ் சாலையில் தொடங்கியுள்ளார். இந்த புதிய உணவகங்களை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். 

பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்ட இந்த உணவகங்களின் திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நடிகர் சூரி நன்றி தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com