விளம்பரங்களில் நடிப்பதை கைவிட்டது ஏன்?: சிவகார்த்திகேயன் பதில்
விளம்பரங்களில் நடிப்பதை கைவிட்டது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் முதன்மை ரோலில் நடித்துள்ள படம் வேலைக்காரன். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் புத்தாண்டு தின சிறப்பாக சிவகார்த்திகேயன் புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டிளித்தார். அப்போது பேசிய அவ, இனி விளம்பர படங்களில் தான் நடிக்க மாட்டேன் என கூறியதற்கான காரணத்தை தெரிவித்தார். பேட்டியில் பேசிய அவர், “ எனக்கு முதன்முதலில் வந்த விளம்பரம் ஒரு கூல்டிரிங்ஸ் விளம்பரம்தான். நான் அதனை வேண்டாம் என சொல்லிவிட்டேன். காரணம் நான் கூல்டிரிங்ஸ் குடிப்பதில்லை. என் குழந்தையையும் கூல்டிரிங்ஸ் குடிக்கவிடுவதில்லை. அதனால் அந்த விளம்பரத்தை மறுத்துவிட்டேன். மற்ற விளரம்பங்கள் வரும்போதும் கூட இதில் நடிக்கலாமா..? அல்லது வேண்டாமா..? என பலமுறை யோசித்தேன். ஒவ்வொரு தயாரிப்புகளையும் இது நல்லதா..? கெட்டதா..? என பரிசோதித்து கொண்டு இருக்க முடியாது. எனக்கு அதற்கான வாய்ப்பும் இல்லை. நல்ல பொருட்களும் நிறைய இருக்கிறது. அதனை விளம்பரத்தினால் தப்பில்லை. ஆனால் ஒவ்வொரு பொருளையும் ஆய்வு செய்ய முடியாது என்பதால் மட்டுமே இனி விளம்பர படங்களில் நடிக்கமாட்டேன்” என தெரிவித்ததாக கூறினார்.

