\
வசூலைக் குவிக்கும் சிவகார்த்திகேயனின் ‘டான்’: 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வசூலைக் குவிக்கும் சிவகார்த்திகேயனின் ‘டான்’: 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வசூலைக் குவிக்கும் சிவகார்த்திகேயனின் ‘டான்’: 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'டான்’ திரைப்படம் மூன்று நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்த ’டான்’ திரைப்படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது.  தமிழகத்தில் சுமார் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைகா தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’டான்’ திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் 8 கோடியே 60 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாம் நாளில் 10 கோடியே 30 லட்சம் ரூபாயும்,  மூன்றாம் நாளில் 11 கோடியே 18 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளது.  இதன்மூலம் மூன்றே நாட்களில் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. 
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் தமிழகத்தில் பெரும் வசூலை ஈட்டி கொடுத்தது. அதைத்தொடர்ந்து தற்போது இத்திரைப்படமும் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமாக அமையும் எனக் கூறப்படுகிறது. 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com