\
கவனம் ஈர்த்த ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியீடு

கவனம் ஈர்த்த ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியீடு

கவனம் ஈர்த்த ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியீடு
Published on: 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

கடந்த 9 ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ நேற்று வெளியாயாவதாக இருந்தது. சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடிய இப்பாடலின் ஆடியோ ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவால் பாடல் வெளியீட்டை ஒத்தி வைத்தது படக்குழு.

இந்த நிலையில் தற்போது ‘சோ பேபி’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ‘செல்லம்மா’ பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தையும் இதுவரை 11 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com