சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’: கவனம் ஈர்த்த ’செல்லம்மா’ பாடல் வீடியோ நாளை வெளியீடு

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’: கவனம் ஈர்த்த ’செல்லம்மா’ பாடல் வீடியோ நாளை வெளியீடு
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’: கவனம் ஈர்த்த ’செல்லம்மா’ பாடல் வீடியோ நாளை வெளியீடு

’டாக்டர்’ படத்தின் ’செல்லம்மா’ பாடல் வீடியோ நாளை வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே 54 கோடி வசூல் செய்துள்ளதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள். ’டாக்டர்’ வெளியாவதற்கு முன்னரே படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து ரிப்பீட் மோடில் கேட்க வைத்தது. இதுவரை, யூடியூபில் இப்பாடல் 130 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதோடு 1 மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது. இப்பாடலின் கொரியோகிராஃபி எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே ‘டாக்டர்’ படத்தைப் பார்த்தவர்கள் பலர். பாடலின் கடைசியில் தனது க்யூட் எஸ்பிரஷன்களால் ரசிகர்களின் ‘செல்லம்மா’ ஆனார் நடிகை பிரியங்கா மோகன்.

அப்படியொரு ஹிட் அடித்த ‘செல்லம்மா’ பாடல் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், நாளை11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com