சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் இதுவரை 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்து திரைத்துறையினர் பாராட்டி வருகிறார்கள். கொரோனா சூழலிலும் குடும்பங்களை தியேட்டருக்கு கொண்டுவந்துள்ளது ‘டாக்டர்’ என்கிறார்கள். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு,தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்துள்ளனர்.
இந்த நிலையில், ‘டாக்டர்’ இதுவரை உலகம் முழுக்க 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் தியேட்டர்களில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த 5 படங்களில் ‘டாக்டர்’ படமும் ஒன்று என்றும், அமெரிக்காவில் இந்தாண்டு வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த தமிழ் படம் ’டாக்டர்’ தான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மட்டுமே 50 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளதாக சோல்லப்படுகிறது.