\
“என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக..” : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

“என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக..” : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

“என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக..” : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
Published on: 

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது உறவினரான ஆர்த்தியை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பத்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கு இன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி நன்றிகள். அம்மாவும் குழந்தையும் நலம்” என்று தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com