\
’Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே’: கவனம் ஈர்க்கும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ பாடல்

’Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே’: கவனம் ஈர்க்கும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ பாடல்

’Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே’: கவனம் ஈர்க்கும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ பாடல்
Published on: 

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘டான்’ வரும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, இப்படத்தின் ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், ‘பே’ (Bae) பாடல் வெளியாகியுள்ளது.

‘பே கண்ணால திட்டிடாதே... பே அந்த சிரிப்பை நிறுத்திடாதே... இனி நான் உன்னை என் கண்ணைப் போல பார்த்துக்கப்போறேன்... துணையா காத்த அந்த மழையக்கூட சேர்த்துக்கப்போறேன். உனக்கு எதுல்லாம் ரொம்பப் பிடிக்கும்னு தெரிஞ்சிக்கப்போறேன்” என்று வரும் விக்னேஷ் சிவனின் வரிகளும் ஆதித்யாவின் குரலும் கவனம் ஈர்க்கின்றன. இப்பாடலுக்கு, பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com