\
ஜூன் மாதம் வெளியாகும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ - கசியும் தகவல்

ஜூன் மாதம் வெளியாகும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ - கசியும் தகவல்

ஜூன் மாதம் வெளியாகும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ - கசியும் தகவல்
Published on

சிம்பு - கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இயக்குநர் ராம் இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

தற்போது, ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார். கெளதம் மேனன் சிம்பு, ரஹ்மான் கூட்டணி என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், ’வெந்து தணிந்தது காடு’ படத்தை வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com