ரஹ்மானின் குரலில் கவனம் ஈர்க்கும் சிம்புவின் "வெந்து தணிந்தது காடு" கிளிம்ப்ஸ்!

ரஹ்மானின் குரலில் கவனம் ஈர்க்கும் சிம்புவின் "வெந்து தணிந்தது காடு" கிளிம்ப்ஸ்!

ரஹ்மானின் குரலில் கவனம் ஈர்க்கும் சிம்புவின் "வெந்து தணிந்தது காடு" கிளிம்ப்ஸ்!
Published on

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமான இத்திரைப்படம், எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ஆக்‌ஷன் - கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

உடலளவில் மெலிந்து இன்னும் இளமையாகவும், நடிப்பில் முதிர்ச்சியையும் கொட்டி நடிப்பில் வெரைட்டிக் காட்டுகிறார் சிம்பு. ஆனால், அவரைவிட கவனம் ஈர்க்க வைத்து கிளிம்ப்ஸை ’பார்த்தாலும் கேட்டாலும் தணியாது’ என்று ரிப்பீட் மோடில் ஓட வைக்கிறது ‘ஓ மறக்குமா நெஞ்சம்... மனசுல சலனம்’ என்று ஒலிக்கும் ஏ.ஆர் ரஹ்மானின் குரல். கிராமத்து ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக முத்துவாக சிம்பு. பின்பு, பரோட்டா பிசைந்த அதே கைகளால் துப்பாக்கியால் ‘டுமீல்.. டுமீல்’ என்றும் சுட்டும் கத்தியை தீட்டியும் மிரட்டல் தருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com