\
சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு’: மனதை மெல்ட் ஆக்கவரும் ஏ.ஆர் ரஹ்மானின் மெலடி!

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு’: மனதை மெல்ட் ஆக்கவரும் ஏ.ஆர் ரஹ்மானின் மெலடி!

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு’: மனதை மெல்ட் ஆக்கவரும் ஏ.ஆர் ரஹ்மானின் மெலடி!
Published on

சிம்பு - கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதல் பாடல் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இயக்குநர் ராம் இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதில், கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் பாடலை தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். கெளதம் மேனன், சிம்பு, ரஹ்மான் கூட்டணி என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் பாடல் வரும் மே 6 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரில் நாயகி சித்தி இட்னானியுடன் காதலுடன் நடந்து வருகிறார் சிம்பு. ஏ.ஆர் ரஹ்மான் இசை என்பதால் ரசிகர்களின் மனதை மெல்ட் ஆக்கும் மெலடியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com