சினிமா
போராட்டக்காரர்களுக்கு முஸ்லிம்கள் உணவு கொடுத்தது தேச விரோதமா?: நடிகர் சிம்பு
போராட்டக்காரர்களுக்கு முஸ்லிம்கள் உணவு கொடுத்தது தேச விரோதமா?: நடிகர் சிம்பு
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்தனர், போராட்டக்காரர்களுக்கு உணவு கொடுத்தனர் என சிலர் கூறுகின்றனர். அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லையா, அவர்களுக்கும் தமிழர் என்ற உணர்வு இருக்காதா என நடிகர் சிம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த நடிகர் சிம்பு, போராட்டக்காரர்களுக்கு முஸ்லிம்கள் உணவு கொடுப்பதால், இது தேச விரோதம் மாதிரியான விஷயமாக திசைமாறுகிறது, என்றால் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது மசூதிகளில் இடம் கொடுத்து உணவு அளித்தார்கள் அது தேசவிரோத குற்றமா என கூறினார்.