'என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்' நடிகர் சிம்பு

'என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்' நடிகர் சிம்பு
'என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்' நடிகர் சிம்பு

பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்

தன்னுடைய ரசிகர்களுக்கு பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்த போது நடிகர் சிம்பு உருக்கமான வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்தார். அதில் யாரும் தனக்கு பிலெக்ஸ், பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம். அந்த பணத்தை உங்கள் குடும்பத்தினருக்காக செலவு செய்யுங்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த வேண்டுகோளுக்கு பலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் சமூக வலைதளங்களில் சிம்புவை ஒரு தரப்பு கிண்டல் செய்தது. 

இதனையடுத்து சில நாட்களுக்கு பிறகு சிம்பு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவு பேனர்களை வைக்க வேண்டும், அண்டாவில் பால் கொண்டு வந்து ஊற்ற வேண்டும் என தெரிவித்தார். அந்த வீடியோ சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சிம்பு மாற்றி மாற்றி பேசுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கட் அவுட் வைக்கும் போது ஏற்பட்ட பிரச்னையில் எனது ரசிகர் இறந்ததால் நான் வேதனையில் இருந்தேன். அதனால் தான் பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அது எல்லாரையும் சென்றடையவில்லை. பின்னர் நெகட்டிவாக கருத்து சொன்னேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கோருகிறேன். படம் பார்க்க வருபவர்களுக்கு அண்டா நிறைய பால் காய்ச்சு ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன். நான் மாற்றிப் பேசவில்லை, எல்லாரையும் மாற்ற வேண்டுமென்றுதான் பேசுகிறேன். இப்போதும் சொல்கிறேன். அண்டா நிறைய பால் ஊற்றுங்கள். பேசாத கட் அவுட்டுக்கு ஊற்றாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு கொடுங்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறியதை மறப்பவன் இல்லை நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அது யார் என தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com