சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' அப்டேட்: அடுத்தவாரம் 'டீசர்'... மார்ச் 2022-ல் ரிலீஸ்?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' அப்டேட்: அடுத்தவாரம் 'டீசர்'... மார்ச் 2022-ல் ரிலீஸ்?
சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' அப்டேட்: அடுத்தவாரம் 'டீசர்'... மார்ச் 2022-ல் ரிலீஸ்?

சிம்பு - கெளதம் மேனனின் கூட்டணியில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமான இத்திரைப்படம், எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி மும்பையில் கடந்த மாதம் இறுதிக்கட்டப் படப்பிடிப்புநிறைவுற்றது. இப்படத்திற்காக உடல் எடை மெலிந்து கவனம் ஈர்க்கிறார் சிம்பு. ஆக்‌ஷன் - கிராமத்து பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் அடுத்தவாரம் வெளியாகிறது என்றும் படத்தை வரும் மார்ச் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'மாநாடு' வெற்றியால், 'வெந்து தணிந்தத் காடு' படத்தின் வெளியீட்டில் தீவிரமாக இறங்கிதுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com