வீட்டைச் சுற்றி ஜாக்கிங் செல்லும் சிம்பு - மஹத் வெளியிட்ட வீடியோ!

வீட்டைச் சுற்றி ஜாக்கிங் செல்லும் சிம்பு - மஹத் வெளியிட்ட வீடியோ!

வீட்டைச் சுற்றி ஜாக்கிங் செல்லும் சிம்பு - மஹத் வெளியிட்ட வீடியோ!
Published on

கொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஓய்வு நேரம் கிடைப்பதால் அனைவரும் ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டும் செய்துகொண்டும் இருக்கிறார்கள். விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டு வேலைகள் செய்வது, செல்லப் பிராணிகளை வளர்ப்பது உள்ளிட்ட புது முயற்சிகளில் இறங்கி அதனை பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் நடிகர் சிம்பு வீட்டிற்குள்ளேயே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் வேண்டுகோளை அடுத்து இந்த வீடியோவை வெளியிடுவதாகக் கூறி நடிகர் மஹத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிம்புவின் உடற்பயிற்சி வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சிம்பு ஜாக்கிங் செல்கிறார், தன்னுடைய ஓட்டத்தை வீட்டிற்குள் தொடங்கி வீட்டைச் சுற்றி ஓடி மீண்டும் வீட்டிற்குள்
முடிக்கிறார் சிம்பு. இந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com