\
‘எல்லாமே கருப்புதான்’ - புதிய லுக்கில் சென்னை திரும்பிய சிம்பு 

‘எல்லாமே கருப்புதான்’ - புதிய லுக்கில் சென்னை திரும்பிய சிம்பு 

‘எல்லாமே கருப்புதான்’ - புதிய லுக்கில் சென்னை திரும்பிய சிம்பு 
Published on

வெளிநாடு சென்றிருந்த நடிகர் சிம்பு புதிய கெட் அப்பில் சென்னை திரும்பியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வெளியான வந்தா ராஜவா வருவேன் படம்தான் சிம்புக்கு கடைசி படம். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த ‘மாநாடு’ படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு எதிர்பாராத சில காரணங்களால் படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதனிடையே, சிம்பு தன்னுடைய குடும்பத்தாருடன் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். விரைவில் அவர் சென்னைக்கு திரும்புகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், புதிய ஹேர் ஸ்டைலுடன் தாய்லாந்தில் இருந்து சிம்பு வந்துள்ளார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷூ, கருப்பு கண்ணாடி என எல்லாவற்றிலும் கருப்பிலே இருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com