சிம்புவை இயக்கப் போகும் விஜய்சேதுபதி இயக்குநர்?

சிம்புவை இயக்கப் போகும் விஜய்சேதுபதி இயக்குநர்?
சிம்புவை இயக்கப் போகும் விஜய்சேதுபதி இயக்குநர்?

விஜய்சேதுபதியை வைத்து‘றெக்க’ படத்தை இயக்கியவர் அடுத்து சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்பு தற்சமயம் மணிரத்னம் படமான ‘செக்கச் சிவந்த வானம்’படத்தில் மும்முரமாக இருக்கிறார். அவரது கையில் வேறு படங்கள் இல்லை. தன்னை சந்தித்து கதை சொல்லவே பலரும் தயங்குவதாக சிம்பு சமீபத்தில் கூறியிருந்தார். அந்தளவுக்கு அவரை சுற்றி வம்புகள் எப்போதும் வட்டம் அடித்து கொண்டுள்ளன. மணிரத்னம் படத்தில் நடிக்க விடாமல் சிலர் சதி செய்வதாகக் கூட அவர் பேட்டி அளித்திருந்தார். அவரே வம்புகளை உருவாக்குகிறாரா? இல்லை அவரை வைத்து வம்புகள் உருவாகின்றனவா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு எல்லாம் காரணம் அவர் ஷூட்டிங்கிற்கு சொன்ன நேரத்திற்கு வருவதில்லை என்பதே. ஆனால் அதை குறித்து சிம்பு சிரத்தை எடுத்து கொண்டாதாக தெரியவில்லை. அதை ஏற்றுக் கொள்ளும் அவர் ‘தாமதமாக வந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்து தருகிறேனா இல்லையா? அதை ஏன் யாரும் சொல்வதில்லை?’என அவர் நியாயம் கேட்கிறார்.

இந்நிலையில் விஜய்சேதுபதியை வைத்து ‘றெக்க’படத்தை இயக்கிய ரத்தின சிவா புதியதாக இயக்க உள்ள திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவே இவரது முதல் படம். ‘றெக்க’ எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. விஜய்சேதுபதியின் திரை வாழ்க்கையில் மிக சுமாரான வசூலையே இது ஈட்டியது. இதன் பின் அருண் விஜய்யை வைத்து ‘வா டீல்’ படத்தை சிவா இயக்கி இருந்தார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com