’ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுடன் இணையும் சிம்பு

’ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுடன் இணையும் சிம்பு

’ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுடன் இணையும் சிம்பு
Published on

சிம்புவின் புதிய படத்தினை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

’ஓ மை கடவுளே’ ஃப்ரெஷ்ஷான காதல் கதை மூலம் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. ’ஓ மை கடவுளே’ சூப்பர் ஹிட் அடித்ததால், தற்போது தெலுங்கிலும் இந்தியிலும் இதன் ரீமேக்கை அஷ்வத் மாரிமுத்துவே இயக்கி வருகிறார். இதற்கான, அறிவிப்பையும் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தினை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ படங்களில் நடித்துவரும் சிம்பு இப்படங்களை முடித்தப்பிறகு அஷ்வத் படத்தில் இணைகிறார். ஏஜிஎஸ் சினிமாஸ் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே, ‘ஓ மை கடவுளே’ படத்தினை பார்த்துவிட்டு சிம்பு அஷ்வத் மாரிமுத்துவையும் படக்குழுவினரையும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com