\
’வெந்து தணிந்தது காடு’ - மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்காக மும்பை பறந்த சிம்பு

’வெந்து தணிந்தது காடு’ - மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்காக மும்பை பறந்த சிம்பு

’வெந்து தணிந்தது காடு’ - மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்காக மும்பை பறந்த சிம்பு
Published on

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்புக்காக நடிக சிம்பு மும்பை சென்றுள்ளார்.

’விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு - கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூரில் தொடங்கி சமீபத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் சிம்பு விமானத்தில் செல்லும் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அதோடு, அவர் மும்பை சென்றவுடன், ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com