\
சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்
Published on

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில்‘மாநாடு’ வெற்றியடைந்ததையொட்டி கெளதம் மேனன் இயக்கும்‘வெந்து தணிந்தது காடு’ படத்தினையும் விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இவரது அடுத்தப் படத்திலும் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். ‘கொரோனா குமார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியானது. ‘ரெளத்திரம்’, ‘காஷ்மோரா’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘அன்பிற்கினியாள்’ படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

இந்த நிலையில், ’கொரோனா குமார்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. தற்போது, முத்தையா இயக்கத்தில் கார்த்தியின் ‘விருமன்’ படத்தில் நடித்துவரும் அதிதி ஷங்கர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com