\
பிஎம்ட்புள்யூ பைக் உடன் வலம் வரும் சிம்பு

பிஎம்ட்புள்யூ பைக் உடன் வலம் வரும் சிம்பு

பிஎம்ட்புள்யூ பைக் உடன் வலம் வரும் சிம்பு
Published on

பிஎம்டபுள்யூ பைக் உடன் சிம்பு வலம் வருதை போல ட்விட்டரில் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு பைக்குளின் மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மிகச் சாதாரணமான பைக் விலையே ஒன்றரை லட்சத்திற்கு மேல் என்பதை இளம் தலைமுறை பெரியதாக எடுத்து கொள்வதே இல்லை. பொதுமக்களே வெளிநாட்டு பைக்குளின் வாடிக்கையாளர்களாக தரம் உயர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் திரைநட்சத்திரங்கள் மேலும் ஒரு படி முன்னேறி அதிநவீன வெளிநாட்டு பைக்குகளை வாங்கத் தொடங்கி உள்ளனர். 
இன்று திடீரென்று பிஎம்டபுள்யூ பைக் ஷோரூமுக்கு வருகை தந்த நடிகர் சிம்பு அங்குள்ள பைக்குளை எடுத்து ட்ரெய்ல் பார்த்தார். இவர் வாங்க விரும்பி உள்ள இந்தப் பைக்கின் விலை 18 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. அதன் என்ஜின் பவருக்கு தகுந்தவாறு விலை இன்னும் கூடலாம். 
சிம்புவின் இந்த பைக் சவாரி பற்றி அவரது வட்டாரத்தை விச்சாரித்த போது “அவர் புதிய பிஎம்டபுள்யூ காரை பார்ப்பதற்காகதான் போனார். அப்படியே பைக்கையும் பார்த்தார். அதன் அழகு அவருக்குப் பிடித்து போனது. ஒருவேளை விரைவில் சிம்பு அந்த பைக்கில் சென்னையை வலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com