\
மும்பையில் ’மாநாடு’ பிரிமியர் ஷோ: நேரில் கலந்துகொண்ட சிம்பு... எஸ்.ஜே சூர்யா

மும்பையில் ’மாநாடு’ பிரிமியர் ஷோ: நேரில் கலந்துகொண்ட சிம்பு... எஸ்.ஜே சூர்யா

மும்பையில் ’மாநாடு’ பிரிமியர் ஷோ: நேரில் கலந்துகொண்ட சிம்பு... எஸ்.ஜே சூர்யா
Published on

மும்பையில் 'மாநாடு’ படத்தின் பிரிமியர் ஷோவில் ‘மாநாடு’ படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வெளியாகாமல் ஒர்க்கிங் நாளில் வெளியாகியே படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் வெளியானது. ’மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுக்க இதுவரை ரூ.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு மும்பையில் ‘மாநாடு’ படத்தின் பிரிமியர் ஷோவில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில், பாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சினிமாத்துறையினர் பார்த்துள்ளனர். அதோடு, ‘மாநாடு’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com