\
மாநாடு பட மோஷன் போஸ்டர் வெளியீடு - சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்!

மாநாடு பட மோஷன் போஸ்டர் வெளியீடு - சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்!

மாநாடு பட மோஷன் போஸ்டர் வெளியீடு - சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்!
Published on

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதை தயாரித்து வருகிறார். யுவான்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக இது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக  வெளியான புதிய போஸ்டரில் நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் எதிரும் புதிருமாக நிற்கின்றனர். 

அதை வைத்து பார்க்கும் போது படத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரி போல தெரிகிறது. கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ், ரவிகாந்த் மாதிரியான நடிகர்கள் மாநாடு படத்தில் நடித்து வருகின்றனர்.  

சுமார் 1.04 நிமிடங்கள் ஓடும் இந்த மோஷன் போஸ்டரில் சிம்பு துப்பாக்கியுடன் அரசியல் கட்சி மாநாட்டில் யாரையோ பழிவாங்க செல்வது போல தெரிகிறது. இதற்கு யுவனின் இசையும் அற்புதமாக உள்ளது. இதுவொரு அரசியல் சார்ந்த படம் என்பதற்கு ஏற்றார்போல் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com