என்ன சொல்ல வருகிறார் சித்தார்த்?: குழப்பல் ட்வீட்ஸ்
காவிரி போராட்டங்கள் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புக்கள் தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் விளைவாக சென்னையில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று தமிழகம் வருகை தந்த மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் தீவிரமாகி உள்ளது. பாரதிராஜா, தங்கர்பச்சான், அமீர், வெற்றிமாறன் போன்ற அரசியல் கட்சி சார்பில்லாத திரைப்பிரபலங்கள் கூட தெருவில் இறங்கிப் போராட்டி வருகின்றனர். அதன் விளைவாக அவர்கள் கைது செய்யப்படுவதும் பின் விடுதலை செய்யப்படுவதுமாக நிலைமை நீடித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சித்தார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதி, “ஐபிஎல்- சிஎஸ்கே போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு வாழ்த்துகள். இது போல போராட்டம் நடத்தி டாஸ்மாக்கை மூட முடியுமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் பல வருந்தத்தக்க விஷயங்கள் நடைபெறுகிறது. மக்கள் அதற்கு போராட்டுவார்களா?” என ஒரு குழப்புக் குழப்பியுள்ளார். அதைவிட அடுத்த ட்விட்டில் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம். இதற்கு பிரதமர் மோடி பதில் தரவேண்டும். தமிழ்நாடே கூட்டாக ஒரு நோக்கத்திற்காக போராடுகிறோம். தமிழர்கள் தங்களைத்தானே தமிழர்கள் அல்ல என்று கூறுகின்றனர் என்பது வெட்கம். இந்தியர்களை இந்தியாவுக்கு எதிரனவர்கள் என்று சொல்வது அதைவிட வெட்கம்” என்று கூறியுள்ளார். இறுதியாக என்ன சொல்ல வருகிறார் அவர் புரியவே இல்லை.