மேட்ச நிறுத்த மட்டும் வாங்க - மறைமுகமாக சாடிய சித்தார்த்

மேட்ச நிறுத்த மட்டும் வாங்க - மறைமுகமாக சாடிய சித்தார்த்

மேட்ச நிறுத்த மட்டும் வாங்க - மறைமுகமாக சாடிய சித்தார்த்
Published on

மீ டூ ஹேஷ்டேக் மூலம் வரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரி போராடியவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என நடிகர் சித்தார்த் காட்டமாக கூறியுள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பரப்புரை. அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “சி.எஸ்.கே. மேட்ச நிறுத்துங்க, நீங்க அதுக்குதான் சரியா வருவீங்க” என தொடங்கி மறைமுகமாக சீமான், பாரதிராஜா, மற்ற கட்சிகள் போன்றோரை விமர்சித்துள்ளார்.  தமிழ் சினிமாதுறை சார்ந்தவர்கள் யாருமே மீ டூ ஹேஷ்டேக் மூலம் வரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அரசியல்வாதிகளை சித்தார்த் சீண்டியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com