”விரைவில் மீள்வோம்” ட்விட்டரில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த சித்தார்த்!
கலை என்பது மக்களுக்கானது. அதனால், நடிப்பதோடு மட்டுமல்லாமல், தன்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் மக்கள் பிரச்சனைகளுக்காவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் துணிச்சலோடு குரல் கொடுப்பது மட்டுமல்ல; குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக களத்தில் இறங்கி போராடியும் ‘கெத்’தார்த் என்பதை நிரூபித்தவர் நடிகர் சித்தார்த். அதனாலேயே, திரைத்துறையினர் மட்டுமல்ல அரசியல் விமர்சகர்களும் இவரது ட்விட்டர் பக்கத்தை இந்தியா முழுக்க ஃபாலோவ் செய்கிறார்கள்.
எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திடீரென ட்விட்டரில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்திற்கு திரும்பி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
இன்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் “அடுத்த ஆண்டு தமிழில் எனது நான்கு படங்கள் வெளிவரவிருக்கின்றன. இந்த ஆண்டு முழு உலகிற்கும் கடுமையான ஆண்டு. நாம் அனைவரும் இதிலிருந்து விரைவில் மீள்வோம் என்று நம்புகிறேன். அதுவரைக்கும் உடம்பை பார்த்துக்கோங்க மக்களே. கூடிய சீக்கிரம் சந்திப்போம். உங்கள் சித்தார்த்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

