நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ரகசிய திருமணம்?

நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவுக்கும் திருமணம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சித்தார்த் - அதிதி ராவ்
சித்தார்த் - அதிதி ராவ்Twitter

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்பே கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் அவருக்கு துணை இயக்குநராக இருந்துவந்தார். தொடர்ந்து பாய்ஸ், உதயம் NH4, நூற்றெண்பது, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களின் மூலம் முக்கிய நடிகராக வலம் வந்தார் சித்தார்த். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Actor Siddharth and Actress Aditi Rao
Actor Siddharth and Actress Aditi Rao

நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. அதிதி ராவ் செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா, காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிட்சயமானவர். காத்தோடு காத்தானேன் போன்ற பாடல்கள் மூலமும் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

சித்தார்த் - அதிதி ராவ்
வாவ்வ்!! டைட்டானிக் படத்தில் ரோஸின் உயிரை காப்பாற்றிய மரக் கதவு இவ்வளவு கோடிகளுக்கு ஏலம் போனதா?

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தனர். அதை காட்டும்வகையில் இன்ஸ்டாகிராமில் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டும் வந்தனர்.

இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சித்தார்த்தின் தந்தையிடம் கேட்ட போது, தனக்கே இது செய்திதான் என பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com