”ரொம்ப சாரி சித்தார்த்” - கர்நாடகாவில் போராட்ட களத்தில் இருந்தே குரல் கொடுத்த நடிகர் சிவராஜ் குமார்!

நடிகர் சித்தார்த் கன்னட அமைப்பினரால் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சிவராஜ்குமார்
சிவராஜ்குமார்PT

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு இடையே பிரச்னை நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா தர மறுப்பதால் தமிழ்நாடு அரசு தொடர் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைக்கு கர்நாடகா, தமிழகத்திற்கு 3,000 கனஅடி நீர் திறந்து விடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கன்னட மக்களும், சில அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

குறிப்பாக இன்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு கன்னட சினிமா துறையும் ஆதரவு தெரிவித்து பிலிம் சேம்பரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தலைமையில் ஏராளமான கன்னட நடிகர்-நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.

எல்லொருக்குமே பிரச்னை உள்ளது!- நடிகர் சிவராஜ்குமார்

கன்னட சினிமாத்துறையினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய நடிகர் சிவராஜ்குமார், “காவிரி விவகாரத்தில் அனைத்து தலைவர்களும் அமர்ந்து பேச வேண்டும், பேசித் தீர்வு காண வேண்டும். இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என ஆராய வேண்டுமே தவிர யார் மீதும் குற்றச்சாட்டை வைக்கக் கூடாது. கன்னட மக்கள் எல்லாரையும் ஆதரிக்கின்றனர்.

சிவராஜ்குமார்
சிவராஜ்குமார்

எல்லோருக்குமே பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையை தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நாம் வேறு எதாவது செய்து அதனால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவு ஏற்படக்கூடாது” என்று கூறினார்.

சிவராஜ்குமார்
“இதெல்லாம் தேவையா?” - பேசிக்கொண்டிருந்த சித்தார்த்தை கட்டாயப்படுத்தி வெளியேற்றிய கன்னட அமைப்பினர்!

நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார்!

தொடர்ந்து பேசிய அவர், நேற்று தமிழ் நடிகர் சித்தார்த் தான் நடித்த கன்னட படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது, உள்ளே புகுந்த காவிரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேற்றினர்.

இந்நிலையில் அதற்கு சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்பதாக பேசிய சிவராஜ்குமார், ”எனது தொழில்துறை சார்பாக நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நேற்று அவருக்கு நடந்தது எனக்கு மிகவும் வேதனையை தந்தது, இதுபோன்ற தவறு மீண்டும் ஒருமுறை நடக்காது. கன்னட மக்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் எல்லா படங்களையும், எல்லா மொழிகளையும் நேசிக்கிறார்கள். எல்லாவிதமான படங்களையும் பார்ப்பது கன்னட மக்கள் மட்டும் தான்” பேசியுள்ளார்.

சிவராஜ்குமாருக்கு முன்பு சித்தார்த்திற்கு நடந்த சம்பவம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவராஜ்குமார்
“கட்சிகளை விட்டுவிட்டு கலைஞர்களை தொந்தரவு செய்றீங்க” - சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com