சாக்கோ
சாக்கோpt

சாலை விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகரின் குடும்பம்... பரிதாபமாக பலியான தந்தை!

இன்று காலை ஏற்பட்ட பயங்கரவிபத்தில் மலையாள நடிகர் சாக்கோவின் தந்தை பலியான நிலையில், சாக்கோவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Published on

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளம் மட்டுமல்லாது, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் சாக்கோவை காணமுடியும். சமீபத்தில் கூட போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியின் மூலம் மலையாள திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த அதிர்ச்சிகர செய்திகள் வெளியானது. இதற்கிடையில், உடல்நலமில்லாமல் ஷைன் டாம் சாக்கோ சிகிச்சைப் பெற்றுவந்ததாகவும்கூறப்படுகிறது.

இந்நிலையில், தொடுபுழாவில் இருந்து நேற்று இரவு 10 மணியளவில் தனது குடும்பத்தினருடன் பெங்களூரை நோக்கி பயணித்து வந்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ. இந்தநிலையில்தான், கார் சரியாக இன்று (6.6.2025) காலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்புறத்தில் வந்த லாரி ஒன்று காரில் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால், கார் பயங்கரமாக நொறுங்கியது.

இதனால், காரில் இருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, லாரி காரில் பலமாக மோதியதால் காரின் பின்புறம் அமர்ந்திருந்த வைஷன் டாம் சாக்கோவின் தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாக்கோ
'தக் லைஃப்' திரைப்படம் இணையதளத்தில் வெளியீடு.. படக் குழுவினர் அதிர்ச்சி!

தொடர்ந்து, நடிகர் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் டாம் சாக்கோவுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com