நடிகர் சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமணம் நிறுத்தப்பட்டதா?

''சர்வானந்த், தற்போது இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யாவின் இயக்கத்தில் தயாராகி வரும் புதியப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்''
Sharwanand - Rakshitha Reddy
Sharwanand - Rakshitha Reddy@imsharwanand - Instagram

‘நாளை நமதே’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சர்வானந்த். இவருக்கும் சாப்ட்வேர் என்ஜினீயரான ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி ஹைதராபாத்தில், நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவி, ராம் சரண், ஸ்ரீகாந்த், அகில் அக்கினேனி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். சித்தார்த், அதிதி ஆகியோரும் விழாவில் பங்குபெற்றிருந்தனர்.

Sharwanand Engagement
Sharwanand Engagement

விரைவில் திருமண தேதியை அறிவிப்பதாக இருந்த நிலையில், சர்வானந்த்-ரக்ஷிதா ரெட்டி திருமணம், நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவின. தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை நடிகர் சர்வானந்தின் நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துள்ளன.

ஹைதராபாத் டைம்ஸில் வெளியாகியுள்ள தகவலின்படி, “சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி பிரிந்ததாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சர்வானந்த், தற்போது இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யாவின் இயக்கத்தில் தயாராகி வரும் புதியப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்திற்காக லண்டனில் 40 நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பியுள்ளார்.

திருமணம் எனும் புதிய பயணத்தைத் தொடங்கும் முன் தனது படப்பிடிப்பு பணியை முடிக்க விரும்பினார் சர்வானந்த். தற்போது அவர் ஊருக்குத் திரும்பியிருப்பதால், இருவீட்டார் குடும்பத்தினரும் சந்தித்து கலந்துப்பேசி திருமணத் தேதியை உறுதி செய்வார்கள். திருமண தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com