\
மும்பையில் தொடங்கிய அட்லீ - ஷாருக்கான் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு

மும்பையில் தொடங்கிய அட்லீ - ஷாருக்கான் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு

மும்பையில் தொடங்கிய அட்லீ - ஷாருக்கான் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு
Published on

ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்கியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் படத்தில் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

புனேவில் ஜூலை இறுதியில் தொடங்கிய முதற்கட்டப் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா,பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்தனர். யோகி பாபு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு ‘லயன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்கியது. 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com