திருப்பதியில் ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் 7ஆம் தேதி வெளியாகிறது.

Nayanthara
Nayantharapt desk

இந்நிலையில் ஜவான் திரைப்படக் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நடிகர் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் அவர் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இந்த தரிசனத்தில் பங்குபெற்றனர். இதையடுத்து கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தை ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் தொட்டு வணங்கி வழிப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com