\
’பார்ட்டி’யால் வரும் மாற்றம்: ஷாம் நம்பிக்கை!

’பார்ட்டி’யால் வரும் மாற்றம்: ஷாம் நம்பிக்கை!

’பார்ட்டி’யால் வரும் மாற்றம்: ஷாம் நம்பிக்கை!
Published on

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம், ‘பார்ட்டி’. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரேம்ஜி இசை அமைக்கிறார். சத்யராஜ், ஜெய், ரெஜினா, சந்திரன், சிவா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது ஃபிஜி தீவில் நடந்து வருகிறது. 

இதில் கேங்ஸ்டராக நடிக்கும் ஷாம் கூறும்போது, ‘ இதில் அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர். வெங்கட் பிரபு இயக்கிய ’மங்காத்தா’ , அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. இந்தப் படம் மூலம் எனக்கும் ஏதோ மாற்றம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர் சிவா, ஒரு நாள் போனில் ’ஃபிஜிக்கு கிளம்புங்க’, என்று சொன்னார். கிளம்பி வந்துவிட்டேன். என் மீது அவருக்கு அன்பு உண்டு. அதனால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன். பார்ட்டி படத்தில் பிரச்சனை பண்ணக்கூடிய, மனதில் பதியக்கூடிய ரோல் செய்துகொண்டிருக்கிறேன். இது ஜாலியான டீம். இருப்பதே பார்ட்டி பண்ணுவது போல்தான் இருக்கிறது’ என்கிறார் .

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com