\
’விஜய் 66’ அப்டேட்: விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் ஷாம்

’விஜய் 66’ அப்டேட்: விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் ஷாம்

’விஜய் 66’ அப்டேட்: விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் ஷாம்
Published on

‘விஜய் 66’ படத்தில் நடிகர் ஷாம் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் 'விஜய் 66’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ‘விஜய் 66’ படப்பிடிப்பு இம்மாதம் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

குடும்பக் கதையாக உருவாகும் இப்படத்தில் நடிகர் ஷாம் இணைந்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாயகனாக நடித்து வந்த ஷ்யாம், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்புத் தோற்றத்திலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ‘விஜய் 66’ படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 'விஜய் 66’ படத்தினை பொங்கலையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com