“உன்னுடைய துணிச்சலை வணங்குகிறேன்” - சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து

“உன்னுடைய துணிச்சலை வணங்குகிறேன்” - சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து

“உன்னுடைய துணிச்சலை வணங்குகிறேன்” - சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து
Published on

இன்று பிறந்த நாள் காணும் நடிகர் சூர்யாவுக்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாக்கு இன்று 44வது பிறந்த நாள். இதையொட்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ள நடிகர் சத்யராஜ், “சில கஷ்டங்கள் அதற்குள் சில இழப்புகள் இருக்கிறது. பல எதிர்ப்புகளை பல சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 

அதனால் நீ சமூக நீதிக்காகவும், கல்விக்காகவும் குரல் கொடுத்ததை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் நுனிப்புல்லை மேய்ந்தது போல மேலோட்டமாக எதுவும் சொல்லாமல், ஆழமாக இறங்கி ஆராய்ந்து சொல்ல வேண்டிய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறாய். இந்த பிறந்த நாளுக்கு உன்னை விட வயதில் பெரியவன் என்பதால் வாழ்த்துகிறேன். உன்னுடைய துணிச்சலை வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com