பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ள அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவிருக்கின்றன. ‘சூர்யா 40’ படத்தின் ஹீரோயின் யார் என்று எதிர்பார்ப்புகள் நிலவிவந்த நிலையில், 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார் என்று இன்று அதிகாரபூர்வமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜின் முந்தையப் படமான கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சத்யராஜ், இப்போது 'சூர்யா 40' படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.