'நல்ல அப்பா கேரக்டர் போர்... அதனால்’ - விருப்பத்தை தெரிவித்த சத்யராஜ்
சிறந்த வில்லன் கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வில்லனாக நடித்து, கதாநாயகனாக மாறி தற்போது நல்ல அப்பாவாக நடித்து வருவதாக கூறினார். ஆனால் நல்ல அப்பாவாக நடிப்பது தற்போது போர் அடித்து விட்டதாக குறிப்பிட்டார். இதன் காரணமாக நல்ல வில்லன் கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் சினிமாவில் வில்லனாக நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் சத்யராஜ் அறிவித்தார்.
ஆனால் அந்த கதாபாத்திரம் அமைதிப்படை, காக்கிச்சட்டை, இருபத்தி நான்கு மணி நேரம், நூறாவது நாள் மற்றும் மிஸ்டர் பாரத் படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களை விட சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் மீண்டும் வில்லனாக நடிப்பேன் என நடிகர் சத்யராஜ் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: “அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை” - அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட்