\
‘‘அப்பா குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்’’ - சத்யராஜ் உடல்நிலை குறித்து சிபிராஜ் ட்வீட்

‘‘அப்பா குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்’’ - சத்யராஜ் உடல்நிலை குறித்து சிபிராஜ் ட்வீட்

‘‘அப்பா குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்’’ - சத்யராஜ் உடல்நிலை குறித்து சிபிராஜ் ட்வீட்
Published on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கடந்தவாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதனை, சத்யராஜின் மகன் சிபி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். “அப்பா நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிட்டார். தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டார். இன்னும் சில நாட்களில் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்புவார். அனைவருக்கும் அன்பும் நன்றியும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலின் மூன்றாவது அலையால் வடிவேலு, மகேஷ் பாபு, அருண் விஜய், மீனா, குஷ்பு, த்ரிஷா, லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோர் திரைத்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com