\
‘குட்வில்’ தூதரான சத்யராஜ் மகள் திவ்யா

‘குட்வில்’ தூதரான சத்யராஜ் மகள் திவ்யா

‘குட்வில்’ தூதரான சத்யராஜ் மகள் திவ்யா
Published on: 

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ‘குட்வில்’ அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சத்யராஜ் மகள் என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் அவரது மகள் திவ்யா. இவர் ஒரு பிரபலமான ஊட்டச்சத்து மருத்துவர்.  சமீபத்தில் மருத்துவ உலகில் நடக்கும் முறைகேடுகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது சேவை உள்ளத்தை கருத்தில் கொண்டு பெங்களூருவை மையமான வைத்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘குட்வில்’ அமைப்பி திவ்யாவை தூதராக நியமித்துள்ளது.

திரைத்துறைக்கு நெருங்கிய வட்டாரத்தில் திவ்யா இருந்தாலும் தனக்கும் சினிமாவிற்கும் சம்பந்தமில்லை என்றும் தனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com